Twitter கொலையாளிக்கு ஜப்பானில் தூக்குத் தண்டனை நிறைவேற்றம்

Takuya Inaba/Kyodo News/AP
34 வயது தகாஹிரோ ஷிராய்ஷி (Takahiro Shiraishi) 2017ஆம் ஆண்டில் 9 பேரைக் கொலை செய்துள்ளார்.
விசாரணையில் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
"Twitter கொலையாளி" ("Twitter killer") என்று அழைக்கப்படும் அவர் இன்று தூக்கிலிடப்பட்டதாக ஜப்பானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஷிராய்ஷி தற்கொலை எண்ணமுடையவர்களை இணையம் வாயிலாகத் தொடர்புகொண்டு தமது வீட்டிற்கு அழைத்தார்.
பின்னர் அவர்களைத் கொன்று உருக்குலைத்தார்.
கொல்லப்பட்ட அனைவரும் 15 வயதுக்கும் 26 வயதுக்கும் இடைப்பட்டவர்கள். அவர்களில் ஒருவரைத் தவிர அனைவரும் பெண்கள்.
ஜப்பானில் 2022க்குப் பிறகு முதல் முறையாக மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
பெரும்பான்மையான ஜப்பானியர்கள் மரண தண்டனை அவசியம் என்று கருதுகின்றனர்.