ஜப்பானில் கடும் பனிப்பொழிவு - 35 பேர் மரணம்
This audio is generated by an AI tool.
ஜப்பானின் சில பகுதிகளில் இதுவரை இல்லாத அளவில் பனி பொழிந்திருக்கிறது.
மோசமான வானிலையால் கடந்த இரண்டு வாரங்களில் 35 பேர் மாண்டனர்.
சுமார் 300 பேர் காயமுற்றனர்.
வீட்டுக் கூரைகளிலிருந்து பனி குடியிருப்பாளர்கள் மீது விழுவது அல்லது வீட்டுக் கூரையில் உள்ள பனியை அகற்றும்போது கீழே விழுவது ஆகியவற்றால் பெரும்பாலானோர் காயமுற்றனர்.
பனியை அகற்ற நாட்டின் வடக்கு, மேற்கு வட்டாரங்களில் ராணுவப் படையினர் முற்படுகின்றனர்.
நாட்டின் வடக்குப் பகுதிகளில் பனிச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
அமோரி (Aomori) பகுதியில் 2 மீட்டர் அளவு பனி பெய்துள்ளதால் குடியிருப்பாளர்கள் வீட்டிலிருந்து வெளியேற முடியாமல் தவிக்கின்றனர்.
பள்ளிகளும் வர்த்தகங்களும் மூடப்பட்டன.
இதற்கிடையே பனிப்புயலால் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கும் தேர்தல் பாதிக்கப்படலாம் என்று கவனிப்பாளர்கள் எச்சரிக்கின்றனர்.
மக்களவையின் 465 இடங்களுக்குச் சுமார் 1,200 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.