Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

தோக்கியோ 2020 உடற்குறையுள்ளோருக்கான ஒலிம்பிக் போட்டிகள் பெரும்பாலும் பார்வையாளர்கள் இன்றி நடத்தப்படும்

ஜப்பான் தலைநகர் தோக்கியோவில், கிருமிப்பரவலால் அவசரகால முடக்கநிலை நடப்பில் இருப்பதால், போட்டிகள் பெரும்பாலும் பார்வையாளர்கள் இன்றி நடத்தப்படும் எனத் தகவல்கள் வெளிவந்துள்ளன.

வாசிப்புநேரம் -

ஜப்பான் தலைநகர் தோக்கியோவில், கிருமிப்பரவலால் அவசரகால முடக்கநிலை நடப்பில் இருப்பதால், போட்டிகள் பெரும்பாலும் பார்வையாளர்கள் இன்றி நடத்தப்படும் எனத் தகவல்கள் வெளிவந்துள்ளன.

வரும் 24ஆம் தேதி போட்டிகள் தொடங்கவிருக்கின்றன.

ஒலிம்பிக் போட்டிகள், கடந்த எட்டாம் தேதி முடிவடைந்தன.

அந்தப் போட்டிகளைப் போன்றே, பெரும்பாலும் பார்வையாளர்கள் இன்றி உடற்குறையுள்ளோருக்கான விளையாட்டு நிகழ்ச்சிகள் நடைபெறும் என ஏற்பாட்டுக் குழு வட்டாரங்களை மேற்கொள்காட்டி Yomiuri நாளிதழ் தகவல் அளித்தது.

சில விளையாட்டுகள் நடத்தப்படும் அரங்குகளில் 5,000 பேர் வரை கலந்துகொள்ள அனுமதிக்கப்படலாம் என்றும் அது குறிப்பிட்டது.

பள்ளிப் பிள்ளைகளை நிகழ்ச்சிகளுக்கு அழைப்பது பற்றி ஏற்பாட்டாளர்கள் இன்னும் பரிசீலனை செய்வதாகவும் கூறப்படுகிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்