உலகின் ஆகப்பெரிய அணுவாலையின் செயல்பாடுகளை நிறுத்திய ஜப்பான்
வாசிப்புநேரம் -
ஜப்பானின் நிகாட்டா (Niigata) வட்டாரத்தில் உள்ள உலகின் ஆகப்பெரிய அணுவாலையின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளன.
அதனுடைய செயல்பாடுகள் தொடங்கிய சில மணி நேரத்திலேயே அந்த அறிவிப்பு செய்யப்பட்டது.
அணுவாலை நிலையாக இருப்பதாகவும் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டதன் காரணம் ஆராயப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
2011ஆம் ஆண்டு ஜப்பானில் நிலநடுக்கமும் சுனாமியும் ஏற்பட்டதால் மூடப்பட்ட அணுவாலைகளில் கஷிவஸாகி-கரிவா (Kashiwazaki-Kariwa) அணுவாலையும் ஒன்று.
கண்காணிப்புக் கட்டமைப்பில் இருக்கும் எச்சரிக்கை ஒலி செயல்பாடுகள் நடந்துகொண்டிருந்தபோது எழுப்பப்பட்டதாக TEPCO எனப்படும் தோக்கியோ எலக்டிரிக் பவர் நிறுவனத்தின் பேச்சாளர் குறிப்பிட்டார்.
வளங்கள் அவ்வளவாக இல்லாததால் ஜப்பான் தன்னுடைய அணுச்சக்தி ஆற்றலை மீண்டும் நடைமுறைபடுத்த எண்ணுகிறது.
புதைபடிவ எரிபொருள்களை நம்பியிருப்பதைக் குறைக்கவும் ஜப்பான் திட்டமிடுகிறது.

ஆதாரம் : AFP