Skip to main content
தேர்தலில் தோற்றாலும் பதவியில் தொடர்வேன்: ஜப்பானிய பிரதமர்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

தேர்தலில் தோற்றாலும் பதவியில் தொடர்வேன்: ஜப்பானிய பிரதமர்

வாசிப்புநேரம் -

ஜப்பானிய பிரதமர் ஷிகெரு இஷிபாவின் (Shigeru Ishiba), தேர்தலில் ஆளுங்கட்சி தோல்வி கண்டபோதும் பதவியில் தொடரப்போவதாகத் தெரிவித்துள்ளார்.

நேற்று (27 அக்டோபர்) நடந்துமுடிந்த தேர்தலில் அவரின் ஆளும் மிதவாத ஜனநாயகக் கட்சி 15 ஆண்டு காணாத தோல்வியைச் சந்தித்தது.

இம்மாதத் தொடக்கத்தில் கட்சித் தலைமையை ஏற்றதும் திரு. இஷிபா தேர்தலுக்கு அழைப்பு விடுத்தார். 

அரசியல் நிதி மோசடி குறித்து அக்கட்சியின் மீது மக்கள் சினமடைந்திருந்த வேளையில் தேர்தல் நடைபெற்றது. 

ஐப்பானிய நாடாளுமன்றத்தில் மொத்தம் 465 இடங்கள்.

வெற்றிபெறக் குறைந்தது 233 இடங்கள் தேவை.

ஆளுங்கட்சிக்கு அதைவிடக் குறைவான இடங்களே கிடைக்கும் என்று கருத்துக்கணிப்புகள் காட்டுகின்றன.

ஆனால் பிரதமர் பதவியில் தொடரப்போவதாகச் சொன்னார் திரு. இஷிபா. 

அரசியல் வெற்றிடம் ஏற்படுவதை விரும்பவில்லை என்றார் அவர்.

மக்களின் தீர்ப்பு கடுமையானது என்று திரு. இஷிபா வருணித்தார். பணம், அரசியல் இரண்டிலும் அடிப்படைச் சீர்திருத்தங்களைக் கொண்டுவர அவர் உறுதிகூறினார்.

அதிகாரத்துவ முடிவுகள் இன்று (28 அக்டோபர்) பின்னேரம் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆதாரம் : AGENCIES

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்