புதிய பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் ஜப்பானிய நாடாளுமன்றம்

JIJI PRESS / AFP
ஜப்பானிய பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கான நாடாளுமன்ற வாக்களிப்பு இன்று (11 நவம்பர்) நடைபெறவிருக்கிறது.
நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின்படி, பொதுத்தேர்தல் நடந்த 30 நாள்களுக்குள் பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் வாக்கெடுப்பு நடைபெறவேண்டும்.
பிரதமர் ஷிகெரு இஷிபாவின் (Shigeru Ishiba) பதவியைத் தக்கவைப்பதில் சவாலை எதிர்நோக்குகிறார்.
சென்ற மாதம் நடந்த கீழவைத் தேர்தலில் திரு. இஷிபாவின் ஆளும் கூட்டணி பெரும்பான்மையை இழந்தது.
பிரதமராவதற்கு ஒரு வேட்பாளர் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெரும்பான்மை பெற வேண்டும்.
இதுபோன்ற சூழல்களில் சிறந்த இரு வேட்பாளர்களுக்குக்கிடையே போட்டி நிலவும்.
திரு. இஷிபாவிற்கு எதிராக முன்னாள் பிரதமர் யோஷிஹிகோ நோடா (Yoshihiko Noda) போட்டியிடுகிறார்.