சீனப் படகைக் கைப்பற்றிய ஜப்பான்
வாசிப்புநேரம் -
ஜப்பான், சீன மீன்பிடிப் படகு ஒன்றைக் கைப்பற்றி அதன் மாலுமியைக் கைதுசெய்துள்ளது.
மாலுமியோடு படகில் 11 பேர் இருந்தனர்.
ஜப்பான்-சீன உறவில் அது பதற்றத்தை அதிகரிக்கக்கூடும்.
ஜப்பானிய அதிகாரி படகைச் சோதிக்க உத்தரவிட்டார். ஆனால் சீன மாலுமி அதை மறுத்துவிட்டார் என்று ஜப்பானிய மீன்பிடி அமைப்பு சொன்னது.
சீனப் படகு ஒன்றை ஜப்பான் கைப்பற்றியிருப்பது நான்கு ஆண்டில் இதுவே முதன்முறை.
சட்டவிரோதமான மீன்பிடி நடவடிக்கைகளைத் தடுப்பதற்கு ஜப்பான் அதன் கடற்பகுதியில் அவ்வப்போது சோதனைகளை நடத்துகிறது.
சென்ற ஆண்டு இரு மீன்பிடிக் கப்பல்களை அது கைப்பற்றியது. அவற்றுள் ஒன்று தைவானைச் சேர்ந்தது மற்றொன்று தென்கொரியாவின் கப்பல்.
சீனாவுக்கும் ஜப்பானுக்கும் இடையே நெடுங்காலமாக எல்லைப்பூசல் நீடிக்கிறது.
ஜப்பானியப் பிரதமர் சனாயே தக்காய்ச்சி அண்மையில் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்துகளால் உறவு மேலும் கசப்படைந்தது.

ஆதாரம் : AFP