Skip to main content
நகரும் நடைபாதையில் கை சிக்கி 5 வயதுச் சிறுவன் மரணம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

நகரும் நடைபாதையில் கை சிக்கி 5 வயதுச் சிறுவன் மரணம்

வாசிப்புநேரம் -
ஜப்பானில் நகரும் நடைபாதையில் (travelator) கை சிக்கி 5 வயதுச் சிறுவன் மாண்டதாக அந்நாட்டு ஊடகம் தெரிவித்துள்ளது.

அந்தச் சிறுவனும் அவரது குடும்பத்தாரும் விடுமுறைக்காகக் ஹொக்காய்டோ (JHokkaido) மாநிலத்தில் உள்ள பனிச்சறுக்கு உல்லாசத்தலத்திற்குச் சென்றிருந்தனர்.

நேற்று (28 டிசம்பர்) காலை நகரும் நடைபாதையிலிருந்து வெளியேறும்போது கீழே விழுந்த சிறுவனின் வலது கை மாட்டிக்கொண்டது.

நகரும் நடைபாதையில் பாதுகாப்பு அம்சங்கள் இருந்தும் அவை செயல்படவில்லை.

சிறுவனின் தாயார் அவசரமாக நிறுத்தும் பொத்தானை அழுத்திய பின்பு தான் நகரும் நடைபாதை நின்றதாக BBC செய்தி நிறுவனம் தெரிவித்தது.

சிறுவனை விடுவிக்க மீட்புப் பணியாளர்கள் 40 நிமிடங்கள் போராடினர்.

அப்போது சிறுவன் சுயநினைவை இழந்துவிட்டதாக BBC சொன்னது.

பின்னர் சிறுவன் மாண்டுவிட்டதாக மருத்துவமனையில் தெரிவிக்கப்பட்டது.

ஏதேனும் பொருள் சிக்கியிருப்பதுபோல் தெரிந்தால் நகரும் நடைபாதையின் செயல்பாடு உடனே நின்றிருக்க வேண்டும்.

நகரும் நடைபாதையில் ஏதேனும் பிரச்சினை உள்ளதா என்பதைக் காவல்துறையினர் விசாரிக்கின்றனர்.

உல்லாசத்தலத்தின் கார் நிறுத்தும் இடத்திலிருந்து பனிச்சறுக்குப் பகுதிகளுக்குச் செல்ல அந்த நகரும் நடைபாதை உதவுகிறது.
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்