ஜப்பானில் நாடாளுமன்றத் தேர்தல்

Reuters
ஜப்பானில் நாளை (27 அக்டோபர்) நாடாளுமன்றத் தேர்தல்.
ஜப்பானிய நேரப்படி இன்றிரவு எட்டு மணிவரை பிரசாரம் செய்யலாம்.
புதிதாகப் பதவியேற்ற பிரதமர் ஷிகெரு இஷிபாவுக்குச் (Shigeru Ishiba) சோதனையாகத் தேர்தல் பார்க்கப்படுகிறது.
பதவிக்கு வந்ததும் அவர் அறிவித்த திடீர்த் தேர்தல் அவருக்கே பாதகமாக முடியலாம் என்றும் கருதப்படுகிறது.
ஆளும் மிதவாத ஜனநாயகக் கட்சிக்கும் முக்கிய எதிர்த்தரப்பு ஜப்பானிய அரசமைப்பு ஜனநாயகக் கட்சிக்கும் இடையே போட்டி கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆளும் மிதவாக ஜனநாயகக் கட்சி 70 ஆண்டாகக் கிட்டத்தட்ட விடாமல் ஆட்சியில் இருந்திருக்கிறது.
இம்முறை அது ஆட்சியமைக்கக் கூட்டணிக் கட்சியான Komeitoவைச் சார்ந்திருக்க நேரலாம் என்று கருதப்படுகிறது.
ஜப்பானிய வாக்காளர்களுக்கு இரண்டு விவகாரம்தான் முக்கியம்.
ஒன்று பொருளாதாரம். மற்றொன்று விலைவாசி உயர்வு.
அப்படி ஆட்சிக்கு வந்தால்...மிதவாத ஜனநாயகக் கட்சி புதிய பொருளியல் திட்டத்தை உருவாக்க உறுதியளித்துள்ளது. சமூகநலனுக்காகக் கூடுதல் செலவு செய்யப்போவதாக ஜப்பானிய அரசமைப்பு ஜனநாயகக் கட்சி கூறியுள்ளது.