ஜப்பானில் விரைவில் திடீர்த் தேர்தல்?
This audio is generated by an AI tool.
ஜப்பானின் கூட்டணிக் கட்சித் தலைவர், நாட்டில் திடீர்த் தேர்தல் நடைபெறக்கூடும் என்று கோடிகாட்டியுள்ளார்.
ஜப்பானியப் பிரதமர் சானே தக்காய்ச்சியைக் (Sanae Takaichi) கடந்த வெள்ளிக்கிழமை (9 ஜனவரி) சந்தித்துப் பேசியதாகத் திரு ஹிரோஃபுமி யொஷிமுரா (Hirofumi Yoshimura) கூறினார்.
முன்கூட்டியே தேர்தலை நடத்துவது குறித்து திருவாட்டி தக்காய்ச்சி பரிசீலிப்பதாக அவர் தெரிவித்தார்.
ஆனால் தேர்தலை எப்போது நடத்துவது என்பது பற்றி இருவரும் பேசவில்லை என்று திரு யொஷிமுரா சொன்னார்.
தேர்தல் பிப்ரவரி 8 அல்லது 15ஆம் தேதியில் நடைபெறக்கூடும் என்று ஜப்பானிய ஊடகங்கள் கூறுகின்றன.
அக்டோபர் மாதம் பதவி ஏற்றதுமுதல் திருவாட்டி தக்காய்ச்சிக்கு மக்களிடையே நல்ல ஆதரவு இருந்துவருகிறது.
அதைப் பயன்படுத்தி தேர்தலை அவர் முன்கூட்டியே நடத்தக்கூடும் என்று கணிக்கப்படுகிறது.