ஜப்பானில் பனி - விமானச் சேவைகள் ரத்துச் செய்யப்படலாம்
This audio is generated by an AI tool.
ஜப்பானில் பலத்த காற்று, கடுமையான பனிப்பொழிவால் விமானச் சேவைகள் தாமதமாகலாம் அல்லது ரத்துச் செய்யப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு விமான நிலையங்களில் அத்தகைய நிலை ஏற்படலாம் என்று ஜப்பானிய விமான நிறுவனங்கள் எச்சரித்தன.
ஜப்பானின் பல பகுதிகளில் வழக்கத்துக்கு மாறான கடுங்குளிர்.
நிலைமை மேலும் மோசமாகலாம் என்று முன்னுரைக்கப்படுகிறது.
வாரயிறுதி வரை மோசமான வானிலை நீடிக்கும் என்கின்றனர் அதிகாரிகள்.
ஜப்பானின் கரையோரப் பகுதிகள் ஆகக் கடுமையாகப் பாதிக்கப்படக்கூடும்.
நிகாட்டா வட்டாரத்தில் ஒரு மீட்டர் உயரம் வரை பனி பொழிவுகிறது.
நாட்டின் வட பகுதியிலும் அதே நிலை நீடிக்கலாம்.
மக்கள் வீட்டிலேயே இருக்குமாறும் தேவையின்றிப் பயணம் செய்யவேண்டாம் என்றும் அரசாங்கம் கேட்டுக்கொண்டது.
முன்னெச்சரிக்கையாக தலைநகர் தோக்கியோவில் முக்கியமான சில நெடுஞ்சாலைகள் மூடப்படக்கூடும்.
ரத்துச் செய்யப்பட்ட அல்லது தாமதமான விமானச் சேவைகளின் கட்டணத்தைத் திருப்பிக் கொடுக்கச் சில விமான நிறுவனங்கள் முன்வந்துள்ளன.