Skip to main content
ஜப்பானில் கொட்டித் தள்ளிய பனி
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

ஜப்பானில் கொட்டித் தள்ளிய பனி - நகர முடியாமல் தவித்த 3,000 வாகனங்கள்

வாசிப்புநேரம் -
ஜப்பானில் கொட்டித் தள்ளிய பனி - நகர முடியாமல் தவித்த 3,000 வாகனங்கள்
படம்: AP/Kyodo News
ஜப்பானில் கடும்பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.

இதனால் நேற்றிரவு மேற்கு ஜப்பானின் நெடுஞ்சாலையில் 23 கிலோ மீட்டர் தூரத்துக்குப் போக்குவரத்து நெரிசல்.

சுமார் 3,000 வாகனங்கள் நகர முடியாமல் நிலைகுத்தி நின்றதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இரவு 7 மணிக்குப் பிறகு அவசர அழைப்பு வந்ததாகக் காவல்துறை தெரிவித்தது.

ஹிரோஷிமா (Hiroshima) நகரில் கார் ஒன்று பனியில் சிக்கிக்கொண்டு நகர முடியாமல் தவித்ததாகத் தகவல் கிடைத்தது.

அதே போல் அடுத்தடுத்து புகார்கள் வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஓர் ஆடவருக்கு மயக்கம் வந்து அவர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகத் தீயணைப்புத் துறை சொன்னது.

சாலைப் பயணிகளில் பெரும்பாலானவர்கள் புத்தாண்டு விடுமுறையைச் சொந்த ஊர்களில் கழித்துவிட்டு நகருக்குத் திரும்பியவர்கள்.

சில குடும்பங்கள் 12 மணி நேரத்துக்கும் மேலாக வாகனங்களில் சிக்கிக்கொண்டன.

சுரங்கப்பாதைக்குள் மாட்டிக்கொண்ட சிலர் தொலைபேசி சமிக்ஞை இல்லாததால் வெளியில் யாரையும் தொடர்புகொள்ள முடியாமல் தவித்தனர்.

ஹிரோஷிமா யாமாகுச்சி (Yamaguchi) இடையே சில சாலைகள் மூடப்பட்டன.
ஆதாரம் : South China Morning Post

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்