ஜப்பான் பல்கலைக்கழகத்தில் தாக்குதல் - 8 பேர் காயம்
ஜப்பானின் தோக்கியோ நகரிலுள்ள பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 8 பேர் காயமுற்றனர்.
Hosei பல்கலைக்கழகத்தில் 20 வயதுடைய பெண் சுத்தியலை வைத்துத் தாக்கியதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
மாணவர் என்று எண்ணப்படும் அவரைப் பல்கலையின் ஊழியர்கள் தடுத்து நிறுத்தினர்.
சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
காயமுற்றோர் சுயநினைவுடன் உள்ளனர். அவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டதாகக் காவல்துறையினர் கூறினர்.
சம்பவம் எவ்வாறு நடந்தது என்பதை அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.