Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

ஜப்பானில் பெண்களைப் பலாத்காரம் செய்த அமெரிக்க கடற்படை வீரர்கள்?

வாசிப்புநேரம் -
ஜப்பானின் ஆக்கினாவா தீவில் இரு அமெரிக்க சிறப்புப் படை வீரர்கள் பெண்களை பலாத்காரம் செய்த சந்தேகத்தில் விசாரிக்கப்படுகின்றனர்.

இத்தகைய தொடர் சம்பவங்கள் ஆக்கினாவா தீவில் வசிப்போருக்கு கோபமூட்டியிருக்கிறது.

1960ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் கீழ், அமெரிக்கத் தளபத்தியம் ஆக்கினாவா தீவில் செயல்பட்டுவருகிறது.

அங்கு அமெரிக்க ராணுவத்தினர் சுமார் 54,000 பேர் உள்ளனர்.

அமெரிக்க இளம் படைவீரர் ஒருவர் சென்ற மாதம் ஒரு ஜப்பானியப் பெண்ணை மானபங்கம் செய்ததாகவும் ஒருவரைத் தாக்கியதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.

மற்றொரு இளம் வீரர் சென்ற ஜனவரியில் அமெரிக்கப் படைத்தளத்தில் ஜப்பானியப் பெண் ஒருவரை பலாத்காரம் செய்ததாகச் சொல்லப்படுகிறது.

அமெரிக்கா விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்கும் என்று அமெரிக்கத் தூதர் ஜப்பானுக்கு உறுதி கூறியிருக்கிறார்.

ஏற்கனவே சென்ற ஆண்டு ஆக்கினாவா தீவில் இத்தகைய மானபங்கச் சம்பவங்கள் பதிவாகின.

சென்ற ஆண்டு அமெரிக்கப் படையுடன் தொடர்புடைய 80 பேர் மீது வெவ்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

இதனால் ஆக்கினாவா குடியிருப்பாளர்களுக்கும் அமெரிக்கர்களுக்கும் இடையே பிளவு அதிகரித்துவருகிறது.

ஜப்பானில் அமெரிக்க வீரர்களுக்கு இடம் கொடுப்பது தேவைதானா என்ற விவாதமும் தொடர்கிறது.
ஆதாரம் : AFP

மேலும் செய்திகள் கட்டுரைகள்