பாண்டா கரடி இல்லை ஆனால் கேளிக்கைக்குப் பஞ்சம் இல்லை - எப்படி?
வாசிப்புநேரம் -
ஜப்பான் விலங்கியல் தோட்டத்தில் ஊழியர்கள் பாண்டா கரடியாக வேடம் தரிக்கின்றனர்.
தோட்டத்திலிருந்து பிரிந்து சென்ற கரடிகளை நினைவுகூர்வதும் பாண்டா பிரியர்களைக் கவர்வதும் நோக்கம்.
ஜப்பானில் 31 ஆண்டுகளாகப் பாண்டா கரடிகள் பராமரிக்கப்பட்டன.
ரௌஹின் (Rauhin) எனும் பாண்டா ஜப்பானில் பிறந்து அங்கேயே வளர்ந்த முதல் பாண்டா.
ரௌஹினுக்கு வயது 25; அதற்கு மூன்று குட்டிகள் உள்ளன.
சென்ற ஆண்டு நான்கு பாண்டாக்களும் சீனாவுக்குத் திரும்பின.
ஜப்பான், சீனா இடையே கடும் பதற்றம் நிலவுவதால் பாண்டாக்களை மீண்டும் கொண்டுவருவது சாத்தியமா என்று தெரியவில்லை.
இந்நிலையில் விலங்கியல் தோட்டம் புதிய நடவடிக்கைகளை அறிமுகம் செய்திருக்கிறது.
ஊழியர்கள் பாண்டா தொப்பிகளை அணிந்தபடி வழங்கப்படும் பழங்களைச் சாப்பிடுகின்றனர்.
பொதுமக்கள் பாண்டா கரடிகள் வளர்க்கப்பட்ட இடத்திற்குள் சென்றுபார்க்க முடிகிறது.
அந்தப் புதிய அனுபவங்களைக் காட்டும் காணொளி இணையத்தில் பரவுகிறது.
அது செயற்கை நுண்ணறிவால் தயாரிக்கப்பட்ட காட்சி என்று எண்ணியதாக இணையவாசி ஒருவர் கூறினார்.
ஊழியர்கள் வேலையின்மையால் தவிப்பதைத் தவிர்க்க அது நல்ல முயற்சி என்றனர் சிலர்.

ஆதாரம் : South China Morning Post