Skip to main content
குரலைத் திருடுகிறது AI?
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம் trending

குரலைத் திருடுகிறது AI?

வாசிப்புநேரம் -
குரலைத் திருடுகிறது AI?

கோப்புப் படம்: REUTERS/Mike Blake

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

ஒருவரின் குரலை AI மூலம் நகலெடுத்து, அனுமதியின்றி பயன்படுத்தலாமா?

ஜப்பானில் பிரபல குரல் நடிகர் ஒருவர் TikTok மீது தொடுத்த வழக்கு இதற்குப் பதில் தேடுகிறது.

கென்ஜிரோ சுடா (Kenjiro Tsuda) என்ற அந்த நடிகரின் குரல், பல பிரபல Anime தொடர்களில் இடம்பெற்றுள்ளது.

தமது ஆழமான குரலை AI மூலம் நகலெடுத்து, சிலர் TikTok காணொளிகளில் பயன்படுத்தியதாக அவர் கூறுகிறார்.

அந்தக் காணொளிகள் மர்மச் சம்பவங்கள், சதிக் கோட்பாடுகள் பற்றியவை.

அவற்றை வெளியிட்ட கணக்கை ஒரு கட்டத்தில் 200,000க்கும் அதிகமானோர் பின்தொடர்ந்தனர்.

மாதத்திற்கு 3,200 டாலருக்கும் அதிகமாக அது சம்பாதித்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

ஆனால் அது சுடாவின் குரல் அல்ல என்று TikTok வாதிடுகிறது.

அது சாதாரண ஆண் குரல் என்று கூறுகிறது.

AI குரல் நகலுக்கு எதிராக ஜப்பானிய நடிகர்கள் பலரும் தற்போது குரல் கொடுத்துள்ளனர்.

ஒருவரின் குரலும் அவரது அடையாளத்தின் ஒரு பகுதியா?

அதற்கு தோக்கியோ நீதிமன்றம் புதன்கிழமை வழங்கும் தீர்ப்பு முக்கிய முன்னுதாரணமாக அமையலாம்.

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்