Skip to main content
"குப்பையைச் சரியாக வீசாதவர்களை அவமானப்படுத்துவோம்"
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

"குப்பையைச் சரியாக வீசாதவர்களை அவமானப்படுத்துவோம்"

வாசிப்புநேரம் -
குப்பைகளை அகற்றும் கடும் விதிமுறைகளைக் கொண்ட நாடுகளில் ஜப்பானும் ஒன்று.

ஜப்பானின் புக்குஷிமா (Fukushima) நகரில் அந்த விதிமுறைகள் இன்னும் கடுமையாகவிருக்கின்றன.

ஜப்பானில் குப்பைகளின் அளவு, எரிக்கக்கூடிய, எரிக்க முடியாதவை, மறுபயனீடு செய்யக்கூடியவை எனப் பிரிக்கப்பட வேண்டும்.

அடுத்த ஆண்டு மார்ச் முதல் ஒவ்வொரு குப்பைப் பையும் சோதனை செய்யப்படும் என்று புக்குஷிமா நகர அரசாங்கம் அறிவித்துள்ளது.

விதிமுறைகளைப் பின்பற்றாதோர் அடையாளம் காணப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டது.

தனிநபரோ, நிறுவனமோ... யாராக இருந்தாலும் அவர்களின் அடையாளம் பொதுமக்களிடம் தெரிவிக்கப்படும் என்று உள்ளூர் ஊடகங்கள் கூறின.

குப்பைகள் நிர்வகிக்கப்படுவதை மேம்படுத்த ஜப்பான் நீண்டகாலமாக முயற்சி செய்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாகப் புதிய அறிவிப்பு வந்துள்ளது.

புக்குஷிமாவில் கடந்த ஆண்டு (2023) குப்பைகள் தொடர்பான விதிமுறைகளைப் பின்பற்றத் தவறியதாக 9,000 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
 
ஆதாரம் : Others

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்