Skip to main content
20 ஆண்டுகள் மௌன வாழ்க்கை வாழ்ந்த தம்பதி
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

20 ஆண்டுகள் மௌன வாழ்க்கை வாழ்ந்த தம்பதி

வாசிப்புநேரம் -
20 ஆண்டுகள் மௌன வாழ்க்கை வாழ்ந்த தம்பதி

படம்: envato.com

ஜப்பானில் ஒரு விநோத தம்பதி....

திருமணமாகி 20 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் அவர்கள் ஒருவருக்கொருவர் ஒருவார்த்தைகூட பேசிக்கொண்டதில்லை.

இந்தச் செய்தியைக் கேள்விப்பட்ட இணையவாசிகளில் பலருக்கு ஆச்சரியம்.

இந்தக் கணவன் மனைவி நாரா (Nara) வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள்.

கணவரின் பெயர் ஓட்டோவ் கட்டயாமா (Otou Katayama), மனைவியின் பெயர் யுமி (Yumi).

திருமணமான நாளிலிருந்து கணவரிடம் பேச மனைவி முயற்சி செய்துள்ளார்.

ஆனால் கணவர் பேசமாட்டார். தலையசைப்பது உள்ளிட்ட பாவனை மொழிகளை மட்டுமே பயன்படுத்தி வந்துள்ளார்.

எனினும் அவரை விட்டுப் பிரியும் எண்ணம் மனைவிக்கு இருந்ததில்லை என்று ஊடகங்கள் கூறுகின்றன.

மனைவியின் கவனமெல்லாம் பிள்ளைகள் மேல் என்றும் தம்மீது இல்லை என்றும் கருதியதால் மனைவியிடம் பேசுவதில்லை என்று கட்டயாமா காரணம் சொல்லியிருக்கிறார்.

அதனைச் சரிப்படுத்த அவர்களின் பிள்ளைகள் முயன்றனர்.

அதற்காக உள்ளூர்த் தொலைக்காட்சி நிறுவனத்தின் உதவியைப் பிள்ளைகள் நாடினர்.

நிறுவனம் தம்பதிக்கு இடையே சந்திப்பொன்றுக்கு ஏற்பாடு செய்தது.

அவர்கள் தனிமையில் பூங்காவொன்றில் சந்தித்தனர்.

அவர்களுக்குத் தெரியாமல் பிள்ளைகளும் தொலைக்காட்சி ரசிகர்களும் அவர்களைப் பார்த்து ரசித்தனர்.

அச்சந்திப்பில் மௌனம் கலைத்து மனைவியிடம் பேசிய கட்டயாமா தமது செயலுக்காக மன்னிப்புக் கேட்டார்.

20 ஆண்டுகளாகத் தம்மை விட்டுப் பிரியாமல் இருந்த மனைவிக்கு நன்றி தெரிவித்தார்.
 
ஆதாரம் : AGENCIES

மேலும் செய்திகள் கட்டுரைகள்