Skip to main content
15 ஆண்டுகள்...ஒவ்வொரு நாளும் ஒரே உணவு
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

15 ஆண்டுகள்...ஒவ்வொரு நாளும் ஒரே உணவு

வாசிப்புநேரம் -
இந்திய உணவு...சீன உணவு...மலாய் உணவு...மேற்கத்திய உணவு...எனப் பலவிதம் கிடைக்கும் சிங்கப்பூரில் உணவுத் தெரிவுகளுக்கு அளவில்லை..

ஒருநாள் சாப்பிடும் உணவை மறுநாள் சாப்பிடுவதற்கு அவசியமில்லை.

அப்படித் தெரிவுகள் அனைத்தும் பறிக்கப்பட்டால்? ஒவ்வொரு நாளும் ஒரே உணவைச் சாப்பிடும் நிலை ஏற்பட்டால்? நினைத்துப் பார்க்கமுடிகிறதா?

ஜப்பானைச் சேர்ந்த 38 வயது கோ கித்தா (Go Kita) என்ற ஆடவர் 15 ஆண்டுகளாக ஒரே வித உணவைச் சாப்பிடுகிறார்.

காலை: நூடல்ஸும் கடலைகளும்

மதியம்: கோழித்துண்டு

இரவு: பன்றித் துண்டுகளும் காய்கறிகளும்

அவ்வாறு சாப்பிடவேண்டும் என்று யாரும் அவரைக் கட்டாயப்படுத்தவில்லை. அவரே சுயமாக எடுத்த முடிவுதான் அது.

முடிவெடுக்காமல் வாழ்வது அவருடைய இலக்கு என்று South China Morning Post செய்தி நிறுவனம் சொன்னது.

கித்தா தாம் அணியும் சட்டையிலிருந்து உறங்கும் நேரம் வரை ஏற்கெனவே தீர்மானித்துவிட்டார்.

அட்டவணையைப் பின்பற்றுவதைப் போல் அவர் ஒவ்வொரு நாளும் ஒரே நேரத்தில் ஆடைகளைச் சலவை செய்வார்...குளிப்பார்...சாப்பிடுவார்...

கித்தா 15 ஆண்டுகளுக்கு முன் முதல்முறையாக வேலையில் சேர்ந்தபோது அதிக மனவுளைச்சலுக்கு ஆளானார்.

இனி முடிவுகளை எடுக்கவேண்டாம் என்று அவர் அப்போது முடிவெடுத்தார்.

ஒருநாளில் எடுக்கக்கூடிய முடிவுகளைக் குறைத்துக்கொள்வதால் மனத்தில் உள்ள பாரம் குறைவதாகக் கித்தா South China Morning Postஇடம் சொன்னார்.
ஆதாரம் : Others

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்