Skip to main content
கோபத்தில் பெண்ணின் உதட்டைத் தைத்தவர் கைது
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

கோபத்தில் பெண்ணின் உதட்டைத் தைத்தவர் கைது

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

ஜப்பான் தலைநகர் தோக்கியோவுக்கு அருகே ஒரு பெண்ணின் உதட்டைத் தைத்துவிட்டார் இன்னொரு பெண்.

அதற்காக 49 வயது மாசே சகுராய் (Masai Sakurai) கைதானார்.

காயமுற்ற பெண்ணிற்கு 42 வயது.

அவர் கோகா (Koga) நகரில் மாசேயுடன் ஒரே வீட்டில் வசித்துவந்தார்.

மாசே அவரின் உதட்டைத் தைத்ததால் வீட்டிலிருந்து தப்பி, அருகிலிருந்த கடை ஒன்றுக்கு விரைந்தார்.

"எனக்கு உதவி செய்யுங்கள்" என்று ஒரு தாளில் எழுதி வைத்திருந்தார்.

அதை, உடனே அருகிலிருந்த கடைக்காரர் ஒருவரிடம் காட்டியதாகக் காவல்துறை அதிகாரி கூறினார்.

அதன்பின் மாசே கைது செய்யப்பட்டார்.

மாசே ஒரு பிரச்சினை காரணமாகக் கோபப்பட்டு அவரின் உதட்டைத் தைத்ததாகக் காயமுற்ற பெண் தெரிவித்தார்.

வீட்டில் இன்னொருவரும் தங்கியிருந்ததாக உறுதி செய்யப்படாத தகவல் கூறுகிறது.

விசாரணை தொடர்கிறது.
ஆதாரம் : AFP

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்