Skip to main content
உலகின் முதல் மரத்தாலான துணைக்கோள்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

உலகின் முதல் மரத்தாலான துணைக்கோள்

வாசிப்புநேரம் -
ஜப்பான், மரக்கட்டையில் செய்யப்பட்ட உலகின் முதல்
துணைக்கோளத்தைத் தயாரித்துள்ளது.

LignoSat எனும் அது வரும் செவ்வாய்க்கிழமை விண்வெளிக்கு அனுப்பப்படும்.

அதன் எடை ஒரு கிலோகிராமுக்கும் குறைவு என்று கூறப்பட்டது.

கியோட்டோ பல்கலைக்கழக ஆய்வார்கள் ஆணிகளோ பசையோ இல்லாமல் பாரம்பரிய முறையில் துணைக்கோளத்தைத் தயாரித்துள்ளனர்.

சுமிட்டோமோ நிறுவனம் தேவையான மெக்னோலியா மரக்கட்டைகளை வழங்கியது.

துணைக்கோளத்தை உள்ளங்கையில் அடக்கிவிடலாம்.

பசுமைக்கு உகந்த முறையில் விண்வெளி ஆராய்ச்சி சாத்தியம் என்பதை அது எடுத்துக்காட்டுகிறது.

விண்ணில் செலுத்தப்படும் துணைக்கோளங்கள் மண்ணில் விழுந்தால் அதன் உலோகப் பாகங்கள் சுற்றுப்புறத்துக்குக் கேடு விளைவிக்கலாம்.

மண்ணைவிட விண்ணுக்கு உகந்தது மரக்கட்டை.

அது மக்கிப்போகத் தண்ணீரோ உயிர்வாயுவோ அங்கில்லை.

எவ்வளவு நாள் தாக்குப்பிடிக்கும் என்பதை மதிப்பிட LignoSat துணைக்கோளம் 6 மாதம் விண்வெளியில் இருக்கும்.
ஆதாரம் : Others

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்