Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

நகங்களுக்கு அழகுசேர்க்கும் பிளாஸ்டிக்

வாசிப்புநேரம் -
நகங்களுக்கு அழகுசேர்க்கும் பிளாஸ்டிக்

(படம்: REUTERS/Manami Yamada)

நெயோமி அரிமோட்டோ (Naomi Arimoto). இவர் ஜப்பானிய நகக் கலை நிபுணர். 

42 வயது அரிமோட்டோ தோக்கியோவில் நகக் கலை அழகு நிலையத்தை நடத்திவருகிறார்.

REUTERS/Manami Yamada

நகக் கலையில் வித்தியாசமான முயற்சியை எடுத்துள்ளார் அவர்.

கடற்கரைகளில் கிடைக்கும் பிளாஸ்டிக் கழிவுகளைச் சேகரித்து சுத்தம் செய்து அவற்றைச்  சிறிய துண்டுகளாக வெட்டி சிறிய இரும்பு வளையத்துக்குள் வைத்து உருக்கி அழகான வடிவமாக மாற்றுகிறார். 

பிறகு அந்த வண்ணமயமான பிளாஸ்டிக் வடிவத்தை போலி நகத்தில் இணைத்துக் கடையில் விற்றுவருகிறார். அதற்கான ஆரம்ப விலை 12,760 யென் ( 111 வெள்ளி) ஆகும்.

ஒருமுறை கடற்கரையைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டபோதுதான் பிளாஸ்டிக் கழிவுகள் ஏற்படுத்தும் மாசு குறித்த விழிப்புணர்வு தமக்கு கிடைத்ததாக அரிமோட்டோ கூறினார்.

REUTERS/Manami Yamada

அப்போது தொடங்கி பிளாஸ்டிக்கை எப்படி மறுபயனீடு செய்யலாம் என்று யோசித்து இந்த போலி நகத்துக்கு அழகுசேர்க்கும் ஆபரணமாக மாற்ற முயற்சி செய்ததாக அவர் சொன்னார்.

அரிமோட்டாவின் இந்த முயற்சிக்கு அவரது வாடிக்கையாளர்களும் ஆதரவளித்து வருகின்றனர். அவரது யோசனையைக் கண்டு  வாடிக்கையாளர்கள் பலர் வியந்தும் போயிருக்கின்றனர். 

ஆதாரம் : Others

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்