Skip to main content
சீனாவுக்குத் திரும்பும் ஜப்பான் பாண்டாக்கள்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

சீனாவுக்குத் திரும்பும் ஜப்பான் பாண்டாக்கள்

வாசிப்புநேரம் -
ஜப்பானின் கடைசி இரண்டு பாண்டாக்கரடிகள் சீனாவுக்குத் திரும்பவுள்ளன.

லெய் லெய், சியாவ் சியாவ் அவற்றின் பெயர்கள்.

ஜனவரி 27ஆம் தேதி அவை ஜப்பானிலிருந்து கிளம்பும்.

சீனாவில் இருக்கும் தங்களது அக்காவுடன் அவை இணையும்.

அவற்றின் அக்கா சியாங் சியாங்கும் முன்பு ஜப்பானின் விலங்கியல் தோட்டத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. 2023ஆம் ஆண்டில் அது சீனாவுக்குத் திரும்பியது.

1970ஆம் ஆண்டுகளில் சீனா மற்ற நாடுகளுடன் அரசதந்திர உறவை வலுப்படுத்த பாண்டா பரிமாற்றத்தைத் (panda diplomacy) தொடங்கியது.

1972ஆம் ஆண்டில் சீனா - ஜப்பான் அரசதந்திர உறவு வழக்கநிலையை எட்டியது.

ஆனால் அண்மையில் இரு நாடுகளுக்கு இடையிலான உறவு மோசமடையத் தொடங்கியது.

சீனா தைவானைத் தாக்கினால் ஜப்பான் ராணுவ ரீதியாகத் தலையிடக்கூடும் என்று ஜப்பானின் பிரதமர் சானே தக்காய்ச்சி (Sanae Takaichi) கூறியதால் உறவு கசந்தது.
ஆதாரம் : AFP

மேலும் செய்திகள் கட்டுரைகள்