Skip to main content
வாழ்த்தியே சம்பாதிக்கும் ஜப்பானின் 'வாழ்த்தும் மாமா'
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

வாழ்த்தியே சம்பாதிக்கும் ஜப்பானின் 'வாழ்த்தும் மாமா'

வாசிப்புநேரம் -
வாழ்த்தியே சம்பாதிக்கும் ஜப்பானின் 'வாழ்த்தும் மாமா'

pixabay

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

தெருக்களில் டிஷ்யூ தாளை விற்போரைப் பார்த்திருப்போம்...

பாடி அல்லது சாகசம் செய்து, பணம் சம்பாதிப்போரைப் பார்த்திருப்போம்...

ஜப்பானில் ஒருவர் மற்றவர்களை வாழ்த்தியே சம்பாதிக்கிறார்.

43 வயது ஆடவர் தம்மை Homemasu Ojisan அதாவது ' வாழ்த்தும் மாமா' என்று அழைத்து கொள்கிறார்.

அவர் தோக்கியோவின் சுறுசுறுப்பான ஷிபுயா (Shibuya) சாலையில் ஓர் அட்டையைப் பிடித்தவாறு நிற்பார்.

'நான் உங்களை வாழ்த்துவேன்' என்று அந்த அட்டையில் எழுதப்பட்டிருக்கும்.

அவருக்கு முன் யார் நின்றாலும் ஆடவர் விதவிதமான வாழ்த்துகளைத் தெரிவிப்பதாக Asahi Shimbun ஊடகம் சொன்னது.

"நீங்கள் கனிவு மிகுந்தவர்..."

"உங்களை நாடி மற்றவர்கள் வருவார்கள்"

"நீங்கள் மகிழ்ச்சி நிறைந்தவர்"

என்று அவர் சொல்லும்போது மனம் நெகிழ்ந்த சிலர் பணம் கொடுப்பதுண்டு.

ஆடவர் நாளொன்றுக்கு 30க்கும் அதிகமானோரை வாழ்த்துகிறார்.

10,000 ஜப்பானிய யென் (87 சிங்கப்பூர் வெள்ளி) சம்பாதிக்கிறார்.

3 ஆண்டுகளாகத் தொழிலைச் செய்யும் அவருக்கு வழக்கமான வாடிக்கையாளர்களும் உள்ளனர்.

"வாழ்த்துப் பெறுவதால் யாரும் வருத்தம் அடைவதில்லை. நான் வாழ்த்தி ஒருவர் மகிழ்ச்சியடைந்தால் அதுவே எனக்கும் மகிழ்ச்சி," என்கிறார் 'வாழ்த்து மாமா'.
ஆதாரம் : Others

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்