நியூ யார்க் நகரில் சாலையை இனி முறையற்ற வகையில் கடக்கலாம்...
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இனிமேல் சாலையை எங்கு வேண்டுமானாலும் கடக்கலாம்!
அங்குச் சாலையை முறையற்ற வகையில் கடப்பது சட்டபூர்வமாக்கப்பட்டுள்ளது.
புதிய சட்டம் நிறப் பாகுபாட்டை முடிவுக்குக் கொண்டுவர உதவும் என நம்பப்படுகிறது.
சென்ற ஆண்டு (2023) சாலையை முறையற்ற வகையில் கடந்ததற்காகப் பிடிபட்டவர்களில் 90 விழுக்காட்டினர் கறுப்பினத்தைச் சேர்ந்தவர்கள் அல்லது லத்தின் அமெரிக்காவைச் சேர்ந்த மக்கள்.
அவ்வாறு பிடிபடுவோருக்கு 250 டாலர் வரை அபராதம் விதிக்கப்பட்டது.
எனினும் சாலையை முறையற்ற வகையில் கடப்போர் முதலில் செல்லும் உரிமை யாருக்கு என்பதை மனத்தில் வைத்து நடக்க வேண்டும் என்றும் புதிய சட்டம் எச்சரித்தது.
போக்குவரத்து விதிமுறைகளைப் பின்பற்றுவதே அனைவருக்கும் பாதுகாப்பானது என்றும் வலியுறுத்தப்பட்டது.
அண்மை ஆண்டுகளில் கலிபோர்னியா, நெவாடா, வெர்ஜீனியா ஆகிய மாநிலங்களும் சாலையை முறையற்ற வகையில் கடப்பதைச் சட்டபூர்வமாக்கியுள்ளன.