ஜொகூரில் மாணவி கொலை - "காரணம் பொறாமை"
படம்: Facebook/Anwar Ibrahim
This audio is generated by an AI tool.
மலேசியாவின் ஜொகூர் மாநிலத்தில் சந்தேக நபர் 16 வயது மாணவியைப் பொறாமையால் கொலை செய்ததாக அதிகாரிகள் நம்புகின்றனர்.
கடந்த சனிக்கிழமை (3 அக்டோபர்) யோங் பெங் (Yong Peng) வட்டாரத்தில் உள்ள பள்ளியில் ஐரீன் சோஃபியா முகமது கைரூல் ஃபைசல் (Irene Sofiya Mohd Khairool Faisal) மயங்கிய நிலையில் காணப்பட்டார்.
அவர் மாண்டதாகப் பின்னர் உறுதிசெய்யப்பட்டது.
அவரின் தலையில் காயங்கள் இருந்ததாக The Star ஊடகம் கூறியது.
காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் ஐரீன் சோஃபியாவின் தலை குழாயால் பலமுறை தாக்கப்பட்டதாகக் தெரியவந்தது.
ஐரீன் சோஃபியா சந்தேக நபரின் காதலை முன்பு நிராகரித்தார்.
அவர் பின்னர் சந்தேக நபரின் நெருங்கிய நண்பரைக் காதலிக்கத் தொடங்கியதாக அதிகாரிகள் நம்புகின்றனர்.
சந்தேக நபர் பழிவாங்கும் எண்ணத்துடன் ஐரீன் சோஃபியாவைக் கொலை செய்ததாக அவர்கள் சந்தேகிக்கின்றனர்.
ஜொகூர் அரசாங்கத் தரப்பிடம் விசாரணை முடிவுகளை ஒப்படைக்கவிருப்பதாகக் காவல்துறையினர் கூறினர்.