காணாமல் போனோரைத் தேடாத காவல்துறை அதிகாரி
வாசிப்புநேரம் -
(கோப்புப் படம்: REUTERS/Kim Hong-Ji)
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
தென்கொரியாவில் காவல்துறை அதிகாரி ஒருவர் கூடுதல் வேலையைத் தவிர்க்க காணாமல்போனவர்கள் பற்றிய விசாரணைகளை நடத்தாமல் இருந்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.
பிரபலச் சுற்றுலாத் தீவான ஜேஜுவில் காணாமல்போனவர்கள் பற்றிய விவகாரத்தை அவர் முறையாகக் கையாளத் தவறியதும் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினரிடம் பொய் சொன்னதும் தெரியவந்தது.
பு (Bu) என்று அழைக்கப்படும் அந்தக் காவல்துறை அதிகாரி கைதானார்.
காவல்துறை அண்மை வாரங்களில் ஜேஜு தீவில் சோதனை நடத்தி நான்கு சடலங்களை மீட்டது.
அதிகாரி பு மேலும் சுமார் 25 காணாமல் போனவர்களின் விவகாரத்தை முறையாக விசாரிக்கத் தவறியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
தவறிழைத்த அதிகாரியின் நடத்தை தொடர்பில் பொதுமக்களிடையே கண்டனக் குரல் எழுந்தது.
காவல்துறையைச் சீர்திருத்த தென்கொரிய அதிபர் லீ ஜே மியுங் உறுதிதெரிவித்தார்.
"கிணற்று நீரைக் கலங்கடிக்கும் மீன்களைப் போல" ஒருசிலரால் ஒட்டுமொத்தக் காவல்துறையின் நற்பெயரும் கெடுவது வருந்தத்தக்கது என்றார் அவர்.

ஆதாரம் : Others