Skip to main content
ஜெருசலத்தில் துப்பாக்கிச் சூடு
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

ஜெருசலத்தில் துப்பாக்கிச் சூடு - 6 பேர் மரணம்

வாசிப்புநேரம் -
ஜெருசலத்தில் துப்பாக்கிச் சூடு - 6 பேர் மரணம்

(படம்: AP/Mahmoud Illean)

ஜெருசலம் (Jerusalem) நகரின் பேருந்து நிலையத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒரு பெண் உட்பட 6 பேர் மாண்டனர்.

நேற்று (8 செப்டம்பர்) பாலஸ்தீனர்கள் இருவர் துப்பாக்கிச் சூட்டை நடத்தினர்.

ஒரு ராணுவ வீரரும் ஆயுதமேந்திய மற்றொருவரும் சம்பவ இடத்தில் அவர்களைச் சுட்டுக் கொன்றதாக இஸ்ரேலியக் காவல்துறை சொன்னது.

சம்பவத்தை "பயங்கரவாதத் தாக்குதல்" என்று அது கூறியது.

20க்கும் மேற்பட்டோர் காயமுற்றதாக அது குறிப்பிட்டது.

6 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.

மாண்டவர்களில் ஒருவர் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்தவர்.

துப்பாக்கிச் சூடு நடத்திய இருவரும் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையைச் சேர்ந்தவர்கள் என்று இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சர் தெரிவித்தார்.
ஆதாரம் : AFP

மேலும் செய்திகள் கட்டுரைகள்