நீரிணை கட்டுப்பாடு அகன்றாலும் தட்டுப்பாடு தொடரும்
This audio is generated by an AI tool.
ஹோர்முஸ் நீரிணை திறக்கப்பட்டாலும் விமான எரிவாயுவின் இருப்பு வழக்கநிலைக்குத் திரும்பப் பல மாதங்கள் பிடிக்கலாம் என்று அனைத்துலக ஆகாயப் போக்குவரத்து அமைப்பு தெரிவித்துள்ளது.
எண்ணெய் விநியோகத்துக்கு முக்கியமான ஹோர்முஸ் நீரிணை மத்திய கிழக்குப் போரால் பல வாரங்களாக மூடியிருக்கிறது.
இரண்டு வாரத்துக்குச் சண்டை நிறுத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்கா தன்னைத் தாக்கவில்லை என்றால் நீரிணை திறக்கப்படும் என்று ஈரான் தெரிவித்தது.
சண்டை நிறுத்த அறிவிப்புக்குப் பின் எண்ணெய் விலை குறைந்தது.
பீப்பாய் எண்ணெய் 100 டாலருக்குக் கீழே இறங்கியது.
உலகத் தரநிலையாகக் கருதப்படும் Brent எண்ணெய் விலை சுமார் 15 விழுக்காடு இறங்கி பீப்பாய்க்குச் சுமார் 93 டாலரானது.
அமெரிக்காவின் WTI எண்ணெயின் விலை சுமார் 16 விழுக்காடு வீழ்ச்சி கண்டு பீப்பாய்க்குச் சுமார் 95 டாலராகப் பதிவானது.