Skip to main content
Jetstar Asia
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

Jetstar Asia - பயணிகள் என்ன செய்வது?

வாசிப்புநேரம் -
Jetstar Asia - பயணிகள் என்ன செய்வது?

(படம்: Envato Elements)

Jetstar Asia அடுத்த 7 வாரங்களுக்குத் தொடர்ந்து விமானச் சேவைகளை வழங்கும்.

அடுத்த மாதம் (ஜூலை) 31ஆம் தேதி அது செயல்பாடுகளை நிறுத்துகிறது.

Jetstar Asia-வின் வழக்கமான விமானச் சேவைகளில் மாற்றங்கள் ஏற்படலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

விமானச் சேவைகளில் மாற்றங்கள் இருந்தால் வாடிக்கையாளர்களுக்கு நேரடியாகத் தொடர்புகொண்டு தகவல் அளிக்கப்படும் என்று Jetstar Asia கூறியது.

Jetstar Asia தொடர்புகொள்ளவில்லை என்றால் விமானச் சேவை திட்டமிட்டப்படி செயல்படும்.

ரத்து செய்யப்பட்ட விமானச் சேவைகளில் விமானச்சீட்டு வாங்கியிருந்தால் பணம் முழுவதும் திருப்பிக் கொடுக்கப்படும்.

வாடிக்கையாளர்களுக்கு மாற்று விமானச் சேவைகளை வழங்குவதற்கும் முயற்சிகள் எடுக்கப்படும்.

Jetstar பற்றுச்சீட்டு வைத்திருப்பவர்கள் ஆகஸ்ட் மாதம் தொடர்புகொள்ளப்படுவர்.

அவர்களுக்குப் பற்றுச்சீட்டுக்கு ஈடான பணம் வழங்கப்படும்.
ஆதாரம் : CNA

மேலும் செய்திகள் கட்டுரைகள்