Skip to main content
Jetstar Asia நிறுத்தம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

Jetstar Asia நிறுத்தம் - 500 ஊழியர்கள் பணிநீக்கம்

வாசிப்புநேரம் -
Jetstar Asia நிறுத்தம் - 500 ஊழியர்கள் பணிநீக்கம்

(கோப்புப் படம்: Bay Ismoyo/AFP/Getty Images)

Jetstar Asia விமானத்தின் செயல்பாடுகள் நிறுத்தப்படுவதால் 500க்கும் அதிகமான ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படவுள்ளனர்.

அந்தத் தகவலை Jetstar Asia பேச்சாளர் CNA-இடம் தெரிவித்தார்.

ஊழியர்களுக்குப் பணிநீக்க இழப்பீடும் வேலை ஆதரவுச் சேவைகளும் வழங்கப்படும்.

குழுமத்திலும் மற்ற விமான நிறுவனங்களிலும் வேலை வாய்ப்புத் தேடித் தர Qantas முயல்கிறது.

ஆஸ்திரேலியாவின் Qantas நிறுவனத்திற்குச் சொந்தமான Jetstar Asia சிங்கப்பூரிலிருந்து இயங்குகிறது.

Jetstar Asia அடுத்த மாதம் (ஜூலை) 31ஆம் தேதி சேவையை நிறுத்துகிறது.

அதற்குப் பிந்திய தேதிகளில் ஏற்கனவே விமானச்சீட்டு வாங்கிய வாடிக்கையாளர்களுக்குப் பணம் முழுமையாகத் திருப்பிக் கொடுக்கப்படும்.

ஆசியாவில் 16 விமானப் பாதைகள் பாதிக்கப்படும் என்று Qantas சொன்னது.

சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா, தாய்லந்து, பிலிப்பீன்ஸ், சீனா, இலங்கை, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு Jetstar Asia விமானச் சேவை வழங்குகிறது.

ஆதாரம் : AGENCIES

மேலும் செய்திகள் கட்டுரைகள்