Jetstar Asia நிறுத்தம் - ஊழியர்களுக்கு இழப்பீடு

(கோப்புப் படம்: AFP/Roslan Rahman)
Jetstar Asia விமானச் சேவைகள் நிறுத்தப்படுவதால் பாதிக்கப்படும் ஊழியர்களுக்கான பணிநீக்க இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊழியர்கள் சேவையாற்றிய ஒவ்வோர் ஆண்டுக்கும் 4 வாரச் சம்பளம் இழப்பீடாக வழங்கப்படும்.
- 2025ஆம் ஆண்டுக்கான போனஸ்
- நன்றி தெரிவிப்பதற்காகச் சிறப்பு வழங்கீடு
ஆகியவை ஊழியர்களுக்கு அளிக்கப்படும்.
ஊழியர்களுக்கான பயணச் சலுகை பணிக்காலத்திற்கு ஈடான காலக்கட்டத்திற்குத் தொடர்ந்து வழங்கப்படும்.
Jetstar Asia விமானத்தின் செயல்பாடுகள் அடுத்த மாதம் (ஜூலை) 31ஆம் தேதி நிறுத்தப்படுகின்றன.
சுமார் 500 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுகின்றனர்.
Jetstar Asia ஆஸ்திரேலியாவின் Qantas விமான நிறுவனத்திற்குச் சொந்தமானது.
அது கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது.
Jetstar Asia மலிவு விலை ஏர்லைன்ஸ் சிங்கப்பூரைத் தளமாகக் கொண்டு இயங்கியது.