Skip to main content
"Jho Low மலேசியா திரும்பவில்லை"
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

"Jho Low மலேசியா திரும்பவில்லை"

வாசிப்புநேரம் -
"Jho Low மலேசியா திரும்பவில்லை"

படம்: AFP/Dimitrios Kambouris

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

மலேசிய துணை நிதியமைச்சர் லியூ சின் டோங் (Liew Chin Tong), 1MDB ஊழலில் தொடர்புடைய தொழிலதிபர் ஜோ லோ (Jho Low) மலேசியா திரும்பியதாக வெளியான தகவலுக்கு மறுப்புத் தெரிவித்துள்ளார்.

Sarawak Report, The Wall Street Journal ஆகிய செய்தித் தளங்கள் மே மாதம் அந்தத் தகவலை வெளியிட்டிருந்தன.

மலேசியாவின் 1MDB வழக்கின் 4.5 பில்லியன் டாலர் ஊழலில் தொழிலதிபர் லோ முக்கியமானவர் என்று குற்றஞ்சாட்டப்படுகிறது.

ஊழல், கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றுவது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் பேரில் மலேசியாவிலும் அமெரிக்காவிலும் அவர் மீது வழக்குகள் உள்ளன.

அவர் தற்போது எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை.

திருடிய சொத்துகளை ஒப்படைக்கப் பேராளர் குழுவுடன் தொழிலதிபர் லோ ரகசியமாய் மலேசியா திரும்பியதாக ஊடகங்கள் தெரிவித்திருந்தன.

அது குறித்த கேள்விக்குத் துணை நிதியமைச்சர் லியூ நாடாளுமன்றத்தில் விளக்கமளித்தார்.

1MDB ஊழல் வழக்கில் இதுவரை 31 பில்லியன் ரிங்கிட் மீட்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

இன்னும் 20 பில்லியன் ரிங்கிட்டை மீட்க அரசாங்கம் முயல்வதாக அவர் சொன்னார்.

தொழிலதிபர் லோவைக் கண்டுபிடித்து சொத்துகளை மீட்டு அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முயன்று வருவதாகவும் திரு. லியூ கூறினார்.
ஆதாரம் : Others

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்