Skip to main content
சவுதி அரேபியப் பட்டத்து இளவரசரைச் சந்திக்கத் திட்டமில்லை
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

சவுதி அரேபியப் பட்டத்து இளவரசரைச் சந்திக்கத் திட்டமில்லை - ஜோ பைடன்

வாசிப்புநேரம் -
இந்தோனேசியாவில் நாளை (13 நவம்பர்) தொடங்கவிருக்கும் G-20 கூட்டத்தின்போது சவுதி அரேபியப் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுடன் (Mohammed bin Salman) நேரடிச் சந்திப்பு நடத்த அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்குத் (Joe Biden) திட்டமில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு தலைவர்களும் இதற்குமுன் கடந்த ஜூலை மாதம் சந்தித்தனர்.

அந்தச் சந்திப்புக்குப் பிறகு சவுதி தலைமையிலான எண்ணெய் ஏற்றுமதி நாடுகளின் அமைப்பு உற்பத்தியைக் குறைத்துக்கொண்டது.

அது அமெரிக்காவில் எண்ணெய் விலையைக் குறைக்கவும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும் அதிபர் பைடன் அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகளுக்குப் பேரிடியாக அமைந்தது.

மேலும் செய்திகள் கட்டுரைகள்