Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

COVID-19 எங்கிருந்து தொடங்கியது? அதற்கு வகைசெய்யும் மசோதாவில் அமெரிக்க அதிபர் கையெழுத்து

வாசிப்புநேரம் -
COVID-19 எங்கிருந்து தொடங்கியது? அதற்கு வகைசெய்யும் மசோதாவில் அமெரிக்க அதிபர் கையெழுத்து

(படம்: Andrew Caballero-Reynolds / AFP)

COVID-19 நோய்த்தொற்று எங்கிருந்து தொடங்கியது என்பதைத் தெரிந்துகொள்ள வகைசெய்யும் மசோதாவில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கையெழுத்திட்டுள்ளார். 

தேசியப் புலனாய்வுப் பிரிவு இயக்குநர் ஏவ்ரில் ஹெயின்ஸ் (Avril Haines) அதுகுறித்த தகவலை வெளியிட மசோதா வழியமைக்கும் என்று வெள்ளை மாளிகை தெரிவித்தது. 

COVID-19 நோய்த்தொற்று எங்கிருந்து தொடங்கியது என்பதை இயன்றவரை வெளிப்படுத்த வேண்டும் என்பது அமெரிக்க நாடாளுமன்றத்தின் இலக்கு என்று திரு. பைடன் கூறினார். எந்தத் தகவலை வெளியிட வேண்டும் என்பதை முடிவுசெய்வதில் தேசியப் பாதுகாப்பு கவனத்தில் கொள்ளப்படும் என்றார் அவர். 

வெள்ளை மாளிகைக்கு அனுப்பப்படுவதற்கு முன், அமெரிக்க மக்களைவையும் செனட் சபையும் மசோதாவை ஒருமனதாக நிறைவேற்றின.

-AFP

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்