Skip to main content
ஜொகூர் கார் விபத்து
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

ஜொகூர் கார் விபத்து - 19 வயது ஓட்டுநர் 2 நாளுக்குத் தடுத்துவைப்பு

வாசிப்புநேரம் -
ஜொகூர் கார் விபத்து - 19 வயது ஓட்டுநர் 2 நாளுக்குத் தடுத்துவைப்பு

(கோப்புப் படம்: CNA/Jeremy Long)

ஜொகூரில் நடந்த கார் விபத்தில் சம்பந்தப்பட்ட 19 வயது ஓட்டுநர் 2 நாளுக்குத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

அவர் சிங்கப்பூரில் பல்கலைக்கழகத்தில் படிப்பதாக NST செய்தி நிறுவனம் தெரிவித்தது.

அவரும் அவரது 22 வயதுச் சகோதரரும் கார்களை அதிவேகமாக ஓட்டிச் சென்றபோது விபத்து நேர்ந்ததாக நம்பப்படுகிறது.

BMW கார் கட்டுப்பாட்டை இழந்து 4 கார்கள் மீது மோதியதாக மலேசிய ஊடகங்கள் தெரிவித்தன.

திங்கட்கிழமை (1 ஜூன்) நடந்த அந்த விபத்தில் 10 வயதுச் சிறுமி உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மாண்டனர்.

காரை ஓட்டிய 22 வயது ஆடவரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படும் வழியில் உயிரிழந்தார்.

19 வயது ஆடவர் Mercedes-Benz A250 காரை ஓட்டினார்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 5 ஆண்டுவரை சிறைத்தண்டனையும் 15,000 ரிங்கிட் வரை (4,800 வெள்ளி) அபராதமும் விதிக்கப்படலாம்.
ஆதாரம் : Others

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்