உலகம் exclusive
ஜொகூர் நிலநடுக்கம்: அதிர்வில் கார்கள் சத்தமிட்டன. பள்ளிக் கட்டடங்கள் ஆடின
Malaysian Meteorological Department
This audio is generated by an AI tool.
மலேசியாவின் ஜொகூர் மாநிலத்தில் மீண்டும் ஏற்பட்ட நிலநடுக்கம் குடியிருப்பாளர்கள் சிலரை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
இன்று (27 ஆகஸ்ட்) காலை செகாமட் வட்டாரத்திலிருந்து சுமார் 18 கிலோமீட்டர் தெற்கே நிலநடுக்கம் ஏற்பட்டது.
நிலநடுக்கம் 4 நாள்களில் 3ஆவது முறையாக உணரப்பட்டது.
3.2 ரிக்டர் அளவுடைய அது 5 விநாடிகளுக்கு நீடித்ததாகக் குடியிருப்பாளர்கள் கூறினர்.
அப்போது கார்களின் எச்சரிக்கை மணிகள் ஒலித்தன...பள்ளிக் கட்டடங்கள் ஆட்டங்கண்டன.
பெருஞ்சத்தம் கேட்டதாகச் சிலர் 'செய்தி'யிடம் கூறினர்.
"நான் வீட்டில் வேலை செய்துகொண்டிருந்தபோது திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இது மூன்றாவது முறை. கொஞ்சம் பயமாக உள்ளது," என்று இல்லத்தரசி ஒருவர் சொன்னார்.
நிலநடுக்கத்தில் யாரும் மாண்டதாக அல்லது காயமடைந்ததாகத் தகவல் இல்லை.
மிதமான நிலநடுக்கம் என்பதால் பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை என்று அதிகாரிகள் கூறினர்.