Skip to main content
ஜொகூர் எல்லைச் சாவடிகளில் தொடரும் தொழில்நுட்பக் கோளாறு
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

ஜொகூர் எல்லைச் சாவடிகளில் தொடரும் தொழில்நுட்பக் கோளாறு

வாசிப்புநேரம் -
ஜொகூர் எல்லைச் சாவடிகளில் தொடரும் தொழில்நுட்பக் கோளாறு
TikTok/hereforthelikes35
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

ஜொகூர் பாருவின் எல்லைச் சாவடிகளில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு இன்னமும் சரிசெய்யப்படவில்லை.

அண்மை நிலவரம் குறித்து மலேசிய எல்லைக் கட்டுப்பாடு, பாதுகாப்பு அமைப்பு அதன் Facebook பக்கத்தில் பதிவிட்டது.

நேற்று சுல்தான் இஸ்கண்டார் சுங்கத்துறைக் கட்டடத்தில் இருக்கும் தானியக்க முகப்புகளின் சேவை தடைபட்டது.

செயல்பாடுகள் இன்னும் வழக்கநிலைக்குத் திரும்பவில்லை.

நிலவரத்தை அணுக்கமாகக் கவனித்து சீரமைப்புப் பணிகளை மேற்கொள்வதாகச் சொல்லப்பட்டது.

அதனால் மலேசியர்களுக்குப் பாதிப்பு இல்லை என்றாலும் வெளிநாட்டுப் பயணிகள் சில இடையூறுகளை எதிர்நோக்குவர் என்றது அமைப்பு.

வெளிநாட்டுப் பயணிகள் National Integrated Immigration System எனும் செயலியைப் பதிவிறக்கம் செய்துகொள்ளும்படி அமைப்பு அறிவுறுத்தியது.

அதன் மூலம் அவர்கள் விரைவுத் தகவல் குறியீடு (QR) வழி இயங்கும் முகப்புகள் அல்லது சாதாரண முகப்புகளை அணுகலாம். 

பொதுமக்கள் உரிய விதிமுறைகளையும் வழிகாட்டலையும் பின்பற்றவேண்டும் என்று அமைப்பு கேட்டுக்கொண்டது.

ஆதாரம் : Others/Social media

மேலும் செய்திகள் கட்டுரைகள்