Skip to main content
மழையிலும் வாக்களிக்கும் ஜொகூர் மக்கள்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

மழையிலும் வாக்களிக்கும் ஜொகூர் மக்கள்

வாசிப்புநேரம் -
மழையிலும் வாக்களிக்கும் ஜொகூர் மக்கள்

படம்: சவுரியம்மாள் ராயப்பன்

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

வெளியீடு : 11 Jul 2026 12:44PM புதுப்பிப்பு : 11 Jul 2026 05:57PM

ஜொகூரில் தேர்தல் வாக்களிப்பு நடக்கும் வேளையில் பல பகுதிகளில் கனமழை. காலை சுமார் 11 மணியளவில் ஸ்கூடாய் (Skudai) நகரில் திடீரென கனமழை பொழியத் தொடங்கியதாக 'செய்தி' நிருபர் சிவரஞ்சனி கூறினார்.

ஏற்கனவே வாக்களிப்பு நிலையங்களில் கூட்ட நெரிசல் அதிகமாக இருப்பதாக அவர் சொன்னார்.

வேறு இடங்களிலும் கனமழை என்பதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டிருக்கிறது.

இருப்பினும் வாக்களிப்பில் சுணக்கம் இல்லை.

மாலை 5 மணி நிலவரப்படி 67.44 விழுக்காட்டினர் வாக்களித்துவிட்டதாக மலேசியாவின் தேர்தல் ஆணையம் வெளியிட்டது.

2022ஆம் ஆண்டு தேர்தலின் இதே நேரத்துடன் ஒப்பிடுகையில் பல இடங்களில் இம்முறை அதிகமான வாக்குகள் செலுத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.

இன்று மழை பெய்தாலும் 70 விழுக்காட்டினர் வாக்களிப்பர் என்று எதிர்பார்ப்பதாக மலேசியாவின் தேர்தல் ஆணையம் சொன்னது.

கடந்த தேர்தலில் 54 விழுக்காட்டினர் மட்டுமே வாக்களித்தனர்.

ஆதாரம் : Mediacorp Seithi

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்