கார் விபத்தில் ஒருவர் மரணம் - 27 வயது சிங்கப்பூரரை விசாரிக்கும் மலேசியக் காவல்துறை: தகவல்
வாசிப்புநேரம் -
படம்: Facebook/Low Michael
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
துவாஸ் சுங்கச் சாவடி அருகே நடந்த விபத்து தொடர்பாக சிங்கப்பூர் வாகனமோட்டியை மலேசியக் காவல்துறையினர் விசாரித்து வருவதாகத் தகவல்கள் கூறுகின்றன.
அந்த 27 வயது Maserati கார் ஓட்டுநர் சட்டவிரோதமாகத் திரும்பியபோது சாலையின் நடுப்பகுதியில் மோதியதாகக் கூறப்படுகிறது.
ஜொகூர் பக்கமுள்ள விரைவுச் சாலையில் அந்தச் சம்பவம் நடந்தது.
அதனால் இரும்பு வேலி சிதறி நான்கு வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்து ஏற்பட்டது.
அதில் 26 வயது மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் தலையில் ஏற்பட்ட பலத்த காயத்தால் சம்பவ இடத்திலேயே மாண்டார்.
மலேசியாவின் New Straits Times பத்திரிகை சிங்கப்பூர் காரோட்டி விசாரிக்கப்படுவதாகத் தெரிவித்தது.

ஆதாரம் : AGENCIES