Skip to main content
ஜொகூரில் வலுப்பெற்றது தேசிய முன்னணி
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

ஜொகூரில் வலுப்பெற்றது தேசிய முன்னணி

வாசிப்புநேரம் -
ஜொகூரில் வலுப்பெற்றது தேசிய முன்னணி

CNA/Zamzahuri Abas

வெளியீடு : 12 Jul 2026 08:29AM புதுப்பிப்பு : 12 Jul 2026 01:13PM
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

ஜொகூர் மாநிலத் தேர்தலில் தேசிய முன்னணி (Barisan Nasional) மாபெரும் வெற்றி அடைந்திருக்கிறது.

மொத்தமுள்ள 56 சட்டமன்ற இடங்களில் அது 48 தொகுதிகளை வென்றது.

பிரதமர் அன்வார் இப்ராஹிமின் (Anwar Ibrahim) பக்காத்தான் ஹராப்பான் (Pakatan Harapan) கூட்டணிக்குப் பெரிய தோல்வி,

அது எஞ்சிய எட்டுத் தொகுதிகளை மட்டுமே வென்றது.

2022ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் தேசிய முன்னணி  40 இடங்களை வென்றிருந்தது.

பக்காத்தான் ஹராப்பான் 12 இடங்களைக் கொண்டிருந்தது.

பின்னிரவு 1 மணி அளவில் தேர்தல் ஆணையம் முடிவுகளை உறுதிசெய்தது.

தேசிய முன்னணித் தலைவர் அஹமது ஸாஹிட் ஹமிடி (Ahmad Zahid Hamidi), ஆதரவாளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

ஜொகூர் மக்கள் இன்னும் சிறந்த வாழ்க்கை வாழ முதலமைச்சர் ஒன் ஹாஃபிஸ் காஸிவிற்குக் (Onn Hafiz Ghazi)தேசிய முன்னணி உதவி செய்யும் என்றார் அவர்.

தேசிய முன்னணிக்குத் திரு அன்வார் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

ஜொகூர் மாநிலத்தில் அவரது கூட்டணி படுதோல்வி அடைந்ததால் பொதுத் தேர்தலை முன்கூட்டியே நடத்தச் சொல்லி நெருக்குதல் வருமா என்பது தெரியவில்லை.

ஆதாரம் : CNA

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்