Skip to main content
ஜொகூரில் வாக்குப்பதிவு நிறைவு
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

ஜொகூரில் வாக்குப்பதிவு நிறைவு

வாசிப்புநேரம் -
ஜொகூரில் வாக்குப்பதிவு நிறைவு

CNA/Zamzahuri Abas

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

வெளியீடு : 11 Jul 2026 06:21PM புதுப்பிப்பு : 11 Jul 2026 06:35PM

ஜொகூரில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நிறைவடைந்துள்ளது.

மாலை 5 மணி நிலவரப்படி 67.44 விழுக்காட்டினர் வாக்களித்துள்ளனர்.

அது சுமார் 1.8 மில்லியன் வாக்காளர்களுக்குச் சமம் என்று தேர்தல் ஆணையம் கூறியது.

இனி வாக்கு எண்ணும் நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகள் கொண்டு செல்லப்படும்.

இன்று (11 ஜூலை) சுமார் 1,100 வாக்களிப்பு நிலையங்களில் மக்கள் தங்கள் வாக்குகளைச் செலுத்தினர்.

3 வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்றிருந்த 'செய்தி' நிருபர் சிவரஞ்சனி, இளையர்கள் பலரைக் கண்டதாகச் சொன்னார்.

"ஜொகூரில் நல்ல மாற்றம் ஏற்படத் தங்கள் பங்கைச் செலுத்தியதாக இளையர்கள் கூறினர்," என்றார் அவர்.

பிரசாரத்தில் கட்சிகள் பல உத்திகளைப் பயன்படுத்தினாலும் வெற்றி பெறும் கட்சி அவற்றை நடைமுறைப்படுத்துவதில் கவனம் செலுத்தவேண்டும் என்று வாக்காளர்கள் விரும்புவதாகவும் சிவரஞ்சனி சொன்னார்.

ஜொகூர் சட்டமன்றத்தில் மொத்தம் 56 இடங்கள்.

சுமார் 2.7 மில்லியன் பேர் வாக்களிக்கத் தகுதிபெற்றிருந்தனர்.

சட்டமன்றத் தேர்தலின் முடிவில் வாக்குப் பதிவு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று கருதப்படுகிறது.

கடந்தத் தேர்தலில் 54 விழுக்காட்டினர் மட்டுமே வாக்களித்தனர்.

ஆதாரம் : Mediacorp Seithi

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்