Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஜொகூர் உணவகத்தில் ஆடவர் சுட்டுக்கொலை - "தனிப்பட்ட சம்பவம்"

வாசிப்புநேரம் -

ஜொகூர் பாருவில் 40 வயது ஆடவர் சுடப்பட்டது தனிப்பட்ட சம்பவம் என்று மாநிலக் காவல்துறைத் தலைவர் M குமார் (M Kumar)  கூறியுள்ளார். 

சம்பவம் நேற்று (8 ஜனவரி) உணவகம் ஒன்றுக்கு வெளியே நடந்தது.

பொதுமக்களை அமைதியாக இருக்கும்படியும் சம்பவத்தைப் பற்றி ஊகங்களைப் பரப்ப வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். 

ஜொகூரின் ஒட்டுமொத்தப் பாதுகாப்புக்கு மிரட்டல் இல்லை என்று திரு குமார் அறிக்கையொன்றில் குறிப்பிட்டார். 

நேற்று (8 டிசம்பர்), தாமான் செத்தியா இந்தா (Taman Setiah Indah) வட்டாரத்தில் மதிய உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்டார். 

அவரின் உடலில் 4 துப்பாக்கிச்சூட்டுக் காயங்கள் இருந்ததாகக் காவல்துறை சொன்னது. 

கொல்லப்பட்டவர் மலேசியர் என்பது உறுதிப்படுத்தப்பட்டது. 

சம்பந்தப்பட்டோரை அடையாளம் காணும் முயற்சி தொடர்கிறது.

ஆதாரம் : AGENCIES

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்