Skip to main content
ஜொகூரில் சாலையில் சண்டை
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

ஜொகூரில் சாலையில் சண்டை - சிங்கப்பூரருக்கு 9,100 ரிங்கிட் அபராதம்

வாசிப்புநேரம் -
ஜொகூர் பாருவில் சாலை வன்முறையில் ஈடுபட்ட சிங்கப்பூர் ஆடவருக்கு சுமார் 2,760 வெள்ளி (9,100 ரிங்கிட்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

40 வயது செங் குவான் போ கோலின் (Cheng Kuan Poh Colin) மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட காரைச் சேதப்படுத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.

அந்தக் காரின் உரிமையாளரான 32 வயது இங் யோவ் மெங்கின் (Ng Yeow Meng) முகத்தில் எச்சில் துப்பி அவமானப்படுத்தியதாகவும் செங் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

சென்ற சனிக்கிழமை (7 ஜூன்) அந்தச் சம்பவம் நடந்தது.

மறுநாள் செங் கைது செய்யப்பட்டார்.

அவர் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார்.

செங் மலேசியக் காருக்குப் பின்னாடி காத்துக்கொண்டிருக்கும்போது பல முறை ஹார்ன் அடித்ததாகக் காவல்துறை தெரிவித்தது.

சம்பவத்தின் காணொளி சமூக ஊடகத்தில் பரவியது.
ஆதாரம் : AGENCIES

மேலும் செய்திகள் கட்டுரைகள்