ஜொகூர் தேர்தல் தொடங்கிவிட்டது
வாசிப்புநேரம் -
படம்: CNA/Zamzahuri Abas
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
ஜொகூர் மாநிலத் தேர்தல் இன்று காலை 8 மணிக்கு அதிகாரபூர்வமாகத் தொடங்கியது.
இது 16ஆவது மாநிலத் தேர்தல்.
மாநிலம் முழுவதும் கிட்டத்தட்ட 1,100 வாக்களிப்பு நிலையங்கள் இருக்கின்றன.
மொத்தம் 56 தொகுதிகளுக்கு 172 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
ஜொகூரின் ஆக அதிக வாக்காளர்களைக் கொண்ட தொகுதியான கோத்தா இஸ்கண்டாரில் (Kota Iskandar) நான்கு முனைப் போட்டி.
பக்கத்தான் ஹராப்பான் (Pakatan Harapan) கூட்டணி, தேசிய முன்னணி கூட்டணி, பெரிக்கத்தான் நேசனல் (Perikatan Nasional) கூட்டணி, Bersama கட்சி என நான்கு தரப்பும் அங்கு போட்டியிடுகின்றன.
அங்கு வாக்களிக்க வந்த சிலரிடம் 'செய்தி' நிருபர் சிவரஞ்சனி பேசினார்.
கூட்ட நெரிசலைத் தவிர்க்கப் பலர் முன்கூட்டியே வாக்களிப்பு நிலையங்களுக்கு வந்துவிட்டதாகக் கூறினர்.
சிங்கப்பூரில் வேலைபார்க்கும் சிலர், விடுப்பு எடுத்துக்கொண்டு வாக்களிக்க வந்ததாகப் பகிர்ந்தனர்.
இன்று மாலை 6 மணிவரை வாக்களிப்பு நடக்கும்.

ஆதாரம் : Mediacorp Seithi