Skip to main content
ஜொகூரில் 12ஆவது மாடி வீட்டிலிருந்து விழுந்த பிள்ளைகள்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

ஜொகூரில் 12ஆவது மாடி வீட்டிலிருந்து விழுந்த பிள்ளைகள் - தாய் கைது

வாசிப்புநேரம் -
ஜொகூரில் 12ஆவது மாடி வீட்டிலிருந்து விழுந்த பிள்ளைகள் - தாய் கைது

(கோப்புப் படம்: Envato Elements)

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

ஜொகூரில் 12ஆவது மாடியில் உள்ள வீட்டிலிருந்து இரு பிள்ளைகள் கீழே விழுந்த சம்பவம் தொடர்பில் தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.

8 வயதுச் சிறுமி உயிரிழந்துவிட்டார்.

10 வயதுச் சிறுவன் கடுமையாகக் காயமுற்றதாகவும் அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாகவும் NST பத்திரிகை தெரிவித்தது.

ஜொகூரின் தம்போய் பகுதியில் அந்தச் சம்பவம் நடந்தது.

சந்தேக நபரான பிள்ளைகளின் தாய் இதற்கு முன்பு எந்தக் குற்றச் செயல்களிலும் ஈடுபட்டதில்லை.

37 வயதாகும் அவர் இந்தோனேசியாவைச் சேர்ந்தவர் என்று NST தெரிவித்தது.

குழந்தைப் புறக்கணிப்புச் சட்டத்தின் கீழ் அவர் விசாரிக்கப்படுகிறார்.

பிள்ளைகள் எப்படி விழுந்தனர் என்பது விசாரிக்கப்படுவதாக ஜொகூர் காவல்துறைத் தலைவர் தெரிவித்தார்.

மக்கள் வதந்தியைத் தவிர்க்குமாறும் அது விசாரணைக்கு இடையூறு விளைவிக்கலாம் என்றும் அவர் கூறினார்.

நேற்றுக் காலை சுமார் 8 மணிக்கு 8 வயதுச் சிறுமியும், 10 வயதுச் சிறுவனும் 7ஆவது மாடியில் காணப்பட்டதாகக் காவல்துறை கூறியது.
ஆதாரம் : Others

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்