Skip to main content
ஜொகூரில் வாக்குகள் எண்ணப்படுகின்றன
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

ஜொகூரில் வாக்குகள் எண்ணப்படுகின்றன

வாசிப்புநேரம் -
ஜொகூரில் வாக்குகள் எண்ணப்படுகின்றன

CNA/Fadza Ishak

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

ஜொகூரில் சட்டமன்றத் தேர்தலில் தற்போது வாக்குகள் எண்ணப்படுகின்றன.

வாக்குப் பதிவு மாலை 6 மணிக்கு முடிவடைந்தது.

பின்னர் வாக்குப் பெட்டிகள் வாக்கு எண்ணும் நிலையங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டன.

மாலை 5 மணி நிலவரப்படி 67.44 விழுக்காட்டினர் வாக்களித்துள்ளதாகத் தேர்தல் ஆணையம் கூறியது.

சுமார் 70 விழுக்காட்டு வாக்குகள் பதிவாகியிருக்கலாம் என்று அது முன்னுரைத்திருந்தது.

தேர்தல் முடிவுகள் இரவு 10 மணிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜொகூர் சட்டமன்றத்தில் மொத்தம் 56 இடங்கள்.

172 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

ஒன்றிய அரசாங்கம் அமைக்கும் தேசிய முன்னணிக்கும் (Barisan Nasional) பக்கத்தான் ஹராப்பான் (Pakatan Harapan) கூட்டணிக்கும் இடையே ஜொகூரில் கடும் போட்டி.

அவை அனைத்து இடங்களிலும் போட்டியிடுகின்றன.

கடந்தத் தேர்தலில் தேசிய முன்னணி 40 இடங்களை வென்று, சட்டமன்றத்தில் பெரும்பான்மை பெற்றது.

ஆதாரம் : CNA

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்