Skip to main content
பிரபல பாடகர் ஜஸ்டின் டிம்பர்லேக்கு Lyme நோய்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

பிரபல பாடகர் ஜஸ்டின் டிம்பர்லேக்கு Lyme நோய்

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

பிரபல பாப் (pop) இசைப் பாடகர் ஜஸ்டின் டிம்பர்லேக் (Justin Timberlake) லைம் (Lyme) நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

44 வயது திரு டிம்பர்லேக் அண்மையில் நடந்து முடிந்த உலக இசைப் பயணம் குறித்து Instagramஇல் பதிவிட்டபோது அந்தத் தகவலைப் பகிர்ந்தார்.

முதன்முறையாக அந்த நோய் தமக்கு ஏற்பட்டத்தை அறிந்தபோது அதிர்ச்சியடைந்ததாக அவர் சொன்னார்.

மேடையில் ஆடிப் பாடி ரசிகர்களை மகிழ்விக்கும்போது உடலில் பெரும் அசதியையும் நரம்பு வலியையும் அனுபவித்தது ஏன் என இப்போதுதான் புரிகிறது என்றார் அவர்.

அவரது இசை நிகழ்ச்சிகள் குறித்துச் சில ரசிகர்கள் குறைகூறிவரும் வேளையில் யாரும் அறியாத தாம் எதிர்நோக்கிய சவால்கள் பற்றி விவரம் தர விரும்பியதாகச் சொன்னார்.

வட அமெரிக்காவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் உள்ள வனப்பகுதிகளில் இருக்கும் டிக் (ticks) எனும் பூச்சிகளிடம் காணப்படும் பெக்டிரியாவால் லைம் நோய் பரவுகிறது.

நோயால் பாதிக்கப்பட்டோருக்கு உடல் அசதி, தசை பலவீனமடைதல், மூட்டு வலி, நோய் எதிர்ப்புச் சக்தி குறைதல் போன்றவை ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.
ஆதாரம் : AFP

மேலும் செய்திகள் கட்டுரைகள்