Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

கனடியப் பிரதமர் ட்ரூடோ பதவி விலகல்

வாசிப்புநேரம் -
கனடியப் பிரதமர் ட்ரூடோ பதவி விலகல்

Dave Chan / AFP

கனடியப் பிரதமர் ஜஸ்ட்டின் ட்ரூடோ (Justin Trudeau) பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.

ஆளும் தேசிய மிதவாதக் கட்சி புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும்வரை பதவியில் நீடிக்கவிருப்பதாக அவர் சொன்னார்.

புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான ஏற்பாடுகளைத் தொடங்கும்படி கட்சியின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களிடம் நேற்றிரவு கேட்டுக்கொண்டதாய் திரு ட்ரூடோ தெரிவித்தார்.

கட்சி உறுப்பினர்களின் கருத்து வேறுபாடுகளில் கவனம் செலுத்தினால் தேர்தலில் சிறப்பாகச் செயல்பட இயலாது என்று அவர் கூறினார்.

 2015இல் கனடியப் பிரதமராகப் பொறுப்பேற்ற திரு ட்ரூடோ அண்மைக் காலத்தில் மக்களின் ஆதரவை இழந்துள்ளார்.

விலைவாசி உயர்வு, குடியிருப்பு குறித்த சர்ச்சை,
அதிகரிக்கும் பணவீக்கம் முதலியவற்றால் மக்களின் அதிருப்தி அதிகரித்துள்ளது. 
 
சென்ற மாதம் துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான திருவாட்டி கிரிஸ்டியா ஃப்ரீலண்ட் (Chrystia Freeland) பதவி விலகினார். 

கனடாவில் வரும் அக்டோபருக்குள் தேர்தல் நடத்தப்படவேண்டும். 

இவ்வேளையில் பதவி விலகல் குறித்து அறிவித்துள்ள திரு ட்ரூடோவின் முடிவு சரி எனக் கூறி சிலர் பிரதமர் அலுவலகத்துக்கு வெளியே கூடியிருந்தனர்.

ஆதாரம் : AGENCIES

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்