நம்பிக்கை இழக்கும் ஹாரிஸ் ஆதரவாளர்கள்
வாசிப்புநேரம் -
படம்: Reuters
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குகள் மும்முரமாக எண்ணப்பட்டு வருகின்றன.
முடிவுகள் குடியரசுக் கட்சி வேட்பாளர் டோனல்ட் டிரம்ப்புக்கு ஆதரவாகத் தெரிகின்றன.
முக்கிய மாநிலங்களாகக் கருதப்படும் ஏழில் இரண்டான நார்த் கரோலைனாவிலும் ஜார்ஜியாவிலும் திரு டிரம்ப் வெற்றிபெற்றுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.
திருவாட்டி ஹாரிஸ் அதிபர் தேர்தலில் வெற்றிபெறும் வாய்ப்புகள் குறைவதாக அவரின் ஆதரவாளர்கள் சிலர் அஞ்சுகின்றனர்.
அவரின் தேர்தல் இரவு தலைமையகமான வாஷிங்டனின் ஹாவார்ட் பல்கலைக்கழகத்திலிருந்து ஆதரவாளர்கள் சிலர் கிளம்பிவிட்டனர்.
இன்றிரவு திருவாட்டி ஹாரிஸ் தமது ஆதரவாளர்களுக்கு உரையாற்றமாட்டார் என்று அவரின் பிரசாரக் குழு தெரிவித்துள்ளது.
திரு டிரம்ப்பின் ஆதரவாளர்கள் பலரும் குதூகலத்தில் உள்ளனர்.
அவர் அதிபர் தேர்தலில் வெற்றிபெறுவார் என்ற நம்பிக்கை அதிகரித்துக்கொண்டே போவதாகச் சிலர் பகிர்ந்தனர்.
தற்போதைய அதிபர் மன்ற வாக்குகள் நிலவரம்...
டிரம்ப்: 246 வாக்குகள்
ஹாரிஸ்: 194 வாக்குகள்
அதிபர் தேர்தலில் வெற்றிபெற 270 அதிபர் மன்ற வாக்குகளைப் பெற வேண்டும்.

ஆதாரம் : AFP